Friday, February 27, 2015

குர்ஆன் மற்றும் தமிழ்,ஆங்கில பாடல்கள் கேளுங்கள்


-Al-Fatiha_Basfar.mp3 Download  





 Al-Muallim_Who is the loved one.mp3
Download







SamiYusuf who is the loved one.mp3
Download







Surah Burooj (Yahya Hawwa).mp3
Download







-Luqman_Mishary_A.mp3
Download







 Beauty Tips for My Sisters in Islam.mp3
Download







 ILLALLAH BY KAMAL UDDIN.mp3
Download
 





 Nasheed - Free ( Hijab ).mp3
Download
 





Al-Mursalat_Mishary.mp3
Download
 





An-Naziat_Ghamidi.mp3
Download
 





- Yusuf Islam - Mountain of Light.mp3
Download
 





-AL-Infitar_Ghamidi.mp3
Download
 





 Ahmed Bukhatir Forgive me nasheed.mp3
Download

Wednesday, February 25, 2015

உதவி

உதவி:

மனிதர்களிடையே உதவும் மனப்பான்மை குறைந்து விட்டதா.

ஆம் இன்று அது கொஞ்சம் குறைந்தே காணப்படுகிறது.
யார் காரணம் கொடுப்பவனா? பெறுபவனா?

என்னை கேட்டால் பெறுபவன் என்று தான் சொல்வேன்.அத்தியாவிசிய தேவை போக இன்று பலர் ஆடம்பரங்களுக்காகவும், பொய்களை சொல்லியும் யாசகம் கேட்கிறார்கள்.
இவர்களின் இச் செயலால் உண்மையான யாசகமும் மறுக்கப்படுகிறது.

கடனை பொறுத்தவரை பலர் அதை திருப்பி செலுத்துவதில்லை.இன்று கடன் வாங்குவோரில் நிறைய பேர் சொத்து வாங்குவதற்க்கும் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவற்குமே பயன் படுத்துகிறார்கள்.

பலரின் இம்மாதியான செயல்களால் சிலரின் உண்மையான தேவைகளும் இருப்பவனால் மறுக்கப்படுகிறது.

கடனோ யாசகமோ பெற்றவன். கொடுத்தவன் கண் முன்னே அந்த பணத்தை அனாவசியமாகவும் ஆடம்பரமாகவும் செலவு செய்யும் போது.கொடுத்தவனுக்கு கோபம் வருவது இயற்கை தானே.

பலரின் தவறால் சிலர் பாதிக்கப்படுவது என்னவோ உண்மை என்றாலும்.உதவும் மனப்பான்மை குறைந்து வருவதற்கு உதவி நாடுவோரே காரணம்.

(கொடுத்து நொந்து போன என் நண்பர் ஒருவர் இன்று என்னிடம் சொல்லி வருத்தப்பட்டதை உங்களிடம் நாசூக்காக பகிர்கிறேன்)

இருப்போர் விலகி இல்லாதோர்க்கு வழி விடுங்கள்.

Saturday, February 21, 2015

மறதி - நாகூர் தீன்

இறைவன் கொடுத்த வரம்
அவமானங்களின் சமாதி
துன்பம் துறக்கும் திறவுகோல்.

மறதி ஒரு தாலாட்டு
முகாரி ராகத்தின் முற்றுப் புள்ளி

மறதியின் பிரதியில்கூட
தோல்விகள் ஜெயிக்கும்
காயங்கள் மாயமாகும்…

இன்று —
மறக்கத் தெரிந்தவனுக்குத்தான்
ஜெயிக்கத் தெரிந்திருக்கிறது!
அஸ்தமிக்கும் சூரியனில்தானே
வெளிச்சம் பிறக்கிறது?

மறதியின் மடியில்தான்
துக்கம் தூரமாகி
தூக்கம் பிறக்கிறது

மனிதம் இல்லாத .
மனிதர்களைக்கூட
மறதி மன்னிக்கிறது…
மனிதனே
மறக்கப் பழகிக் கொள்!

எதை மறந்தாலும் சரி
மறதி மட்டும்
உன் ஞாபகத்தில் இருக்கட்டும்!

ஆக்கம் நாகூர் தீன் அவர்கள்

Friday, February 20, 2015

வச்சான் பாரு எங்காளு! வேட்டிக்கு பாக்கெட்டு!

வச்சான் பாரு எங்காளு!
வேட்டிக்கு பாக்கெட்டு,
ஒட்றதுக்கு பெல்ட்டு!
இந்த நூற்றாண்டின் இணையற்ற
கண்டுபிடிப்புடா என் ராசா!
எவ்வளவு நாள் ஆசை! இந்த வெள்ளை சட்டை,வேட்டியை கட்டிக்கிட்டு கறுப்பு கண்ணாடி போட்டுக்கிட்டு பந்தாவா போகணும்னு!
இந்த வேட்டியை ஒரு தடவை கட்டி
அது அவுறாம இருக்க பட்ட பாடு ஒரு
சினிமாவா எடுக்கலாம்.
சில எடத்துக்கு வெள்ளை கைலியை
கட்டிட்டு போனா 'அவனா நீயி ' அப்படின்னு ஏற இறங்க பார்க்கறாய்ங்க!
இனிமே பயப்படாம வேட்டியை
கட்டி நாமும் தேசிய நீரோட்டத்தில
கலந்துடலாம்!
வெளிநாட்ல இந்த கொழாய் சட்டையை மாட்டிக்கிட்டு,

அவஸ்தைப்பட்டு கெடந்துட்டு
ஊர்லயும் இந்த வெயில்ல அதையே
மாட்டிக்கிட்டு உள்ளே எல்லாம்
வெந்து போயிடுதுடாப்பா!
இனிமே காத்தாட வேட்டியை
கட்டி அசத்த வேண்டியதுதான்!
சல்யூட் ராம்ராஜ், ஆலயாவுக்கு சல்யூட்!

Mohamed Rafiudeen
 
 
 

இன்னமும் மாறாமல் இருப்பது - M.m. அப்துல்லா

''ஏம்ப்பா அப்துல்லா!" என்று ஸ்டேஷன் மாஸ்டர் ஸ்டேஷனில் இருந்து குரல் குடுத்தால், "கூப்டிங்களா சார்?" என வீட்டில் இருந்தே நான் கேட்கும் தூரம் தான் ஸ்டேஷனுக்கும் என் வீட்டிற்கும்!

"6 மணி வண்டி வந்துருச்சு இன்னும் தூங்குது பார் மூதேவி"
அம்மாவின் திருப்பள்ளி எழுச்சியோடுதான் பெரும்பாலும் என் காலைப்பொழுது துவங்கும்.

"7.30 மணி வண்டி வந்துருச்சு! ஸ்கூலுக்கு இன்னுமாடா கிளம்பிக்கிட்டு இருக்க நீ?" என்ற அம்மாக்களின் ஸ்கூல் துரத்தல்.

"ஏய்! 9 மணி வண்டி வந்தாச்சு, வேலைக்கு லேட்டாச்சு. இன்னும் டிஃபன் வைக்கலயா?" என்ற அப்பாக்களின் அலுவல் அவசரம்.

"11 மணி வண்டி வந்தாச்சு! இன்னும் இந்த போஸ்ட்மேனை காணமே?" என்ற கடித எதிர்பார்ப்புகள்.

" 4.30 மணி வண்டி வந்தாச்சு!இன்னும் பசங்கள ஸ்கூல் முடிச்சு காணோமே!" என்ற அம்மாக்களின் அன்புக் கவலை.

"6 மணி வண்டி வந்திருச்சு! விளையாடுனது போதும் உள்ள வந்து படி" என்ற அக்காக்களின் அழைப்பு.

"9 மணி வண்டி வந்தாச்சு! ரொம்ப நேரம் முழிக்காம போய் காலாகாலத்துல படு" என்ற தூக்கத் துரத்தல்கள்...

இப்படி ஒரு நாளின் ஓவ்வொரு நிகழ்வும் எங்களுக்கு இரயிலோடு இணைந்து இருக்கும்.

Thursday, February 19, 2015

மழைக்காலத்து ஈரம் - தாஜ்

மாய வாசிப்பின் இசை நாண்களில் சிக்காததோர்
ஒலி செய்யும் அந்தச் சின்னஞ்சிறு
பறவைகளின் கூட்டம் எங்கே?
சலசலப்புகளுக்கெல்லாம் எழுந்து வானில் கோலமிட்டமரும்
அந்தச் சிட்டுகளின் கூட்டமெங்கே?
அவைகளின் கிசுகிசுக்கும் ரீங்காரப் பண்னெங்கே?
மனத்தைக் கட்டி இழுக்கும் காட்டுப் பூக்களின் வாசனையும்,
வண்ணத்திலொரு நிறம் காட்டியப் பூக்களும்தான் எங்கே?
கோணல் மனம் கொண்ட எந்தவொரு மிருகமும் கூட
இப்படியொரு அழிப்புக்கு உடன்படா!
இப் பாதகங்களுக்கெல்லாம் மனிதன்தான் துணிவான்!
அவனின் கைகளுக்குத்தான் இது சாத்தியம்.
உயிர்களை இப்படி திருகிப் போட அவனுக்குத்தான் கூசாது!
நிர்மூலமான என் சமஸ்தானத்திற்காகவும்,
அங்கே துண்டாடிக் கிடக்கும் மரங்களுக்காகவும்
என் மனம் மௌன அஞ்சலி கொண்டது.

Tuesday, February 17, 2015

ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் முஸ்லிம் பிரதிநிதிகள் 6 கேள்விகள் - தி இந்து

ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் முஸ்லிம் பிரதிநிதிகள் 6 கேள்விகள் - தி இந்து

ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகள் தொடர்பாக அந்த அமைப்பின் சிறுபான்மையினர் துறை
பொறுப்பாளர் இந்திரேஷ் குமாரை சந்தித்த இஸ்லாமிய மத பிரதிநிதிகள் குழு
முக்கியமான 6 கேள்விகளை எழுப்பியது.
சன்னி உலீமா இஸ்லாமிய அமைப்பின் பொதுச் செயலாளர் ஹஜி முகமது சலீஸ்
தலைமையிலான இஸ்லாமிய மதத்தின் பிரதிநிதிகள் குழு திங்கள்கிழமை இரவு
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமாரை சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில் 'இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்ற ஆர்.எஸ்.எஸ்.
முயற்சிக்கிறதா?' என்பன உள்ளிட்ட 6 கேள்விகளை பிரதிநிதிகள் எழுப்பியதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார், இஸ்லாமிய
தலைவர்களுடன் பேச விருப்பம் தெரிவித்த நிலையில், இந்தச் சந்திப்பு
நடந்துள்ளது.

கட்டஞ்சாயாவும் சிகரெட்டும் பின்னே ஞானும்..!! -நிஷா மன்சூர்


கொஞ்சம் ரிலாக்சா நடந்துட்டு வரலாம்னு காதர்பேட்டை பள்ளில மஃரிப் தொழுதுட்டு அப்படியே ராயபுரம் பக்கம் போனேன்.

இன்பாக்ஸ்லதான் இந்த நைஜீரியாக் காரனுங்க தொந்தரவுன்னா இந்த திருப்பூர்லயும் காலுவாளுன்னு கத்திக்கிட்டு அவனுங்களோட ஒரே தொந்தரவாத்தான் இருக்கு.

சரி ஒரு டீ சாப்டலாம்னு பக்கத்துல இருந்த பேக்கரிக்குள்ள நுழைஞ்சேன்.
"மாஷே ஒரு கட்டஞ்சாயா' ந்னு பறஞ்சுட்டு உக்காந்தா ஒரே புகைமூட்டமா இருந்துச்சு,
ஏழுபேர் உக்காந்துருக்கற கடைல ஆறுபேர் கைலயும் சிகரெட் புகைஞ்சுட்டிருந்துச்சு.
நமக்கு இது ஆவாதுன்னு கடைக்கு வெளீல நின்னுட்டு டீயைக் குடிக்கப்போனா
உள்ள தம்மடிச்சுட்டிருந்த ஒரு மகராசன் போனப்பேசிட்டே வெளீல வந்தான்.

Monday, February 16, 2015

வெளிநாட்டு வேலை


இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் வெளிவேலை வாய்ப்புகள்தான் ஓரளவு ஏழைகளுக்குக் கைகொடுத்திருக்கிறது. கிராமங்களிலிருந்து நகரங்களுக்குக் குடிபெயர்ந்தோ, வெளிநாடுகள் சென்றோ வேலைகளைத் தேடிக்கொண்டு, தாமும் பிழைத்து, தம்மை நம்பியுள்ள குடும்பத்தையும் பிழைக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள் லட்சக்கணக்கானோர்.

ஒரு இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் விவசாயக் கூலி வேலை செய்வோர்தான் நம் பகுதியில் அதிகம். ஏர்உழுவது, மாட்டு வண்டிகளில் பாரம் ஏற்றிச் செல்வது, வயக்காட்டு களங்களில் சூடு அடிப்பது, நெல் தூற்றுவது, சிலவேளைகளில் நாற்று நடுவது, களைபிடுங்குவது, கதிர் அறுப்பது போன்ற கைவேலைகளில்தான் நம்மவரில் பெரும்பாலோர் ஈடுபட்டிருந்தனர். ஆடு, மாடு மேய்ப்பவர்களும் இருந்தனர்.

மிகச் சிலர் நெல் வியாபாரம், பெட்டிக் கடை, காய்கறி வியாபாரம் என்று சிறு, குறு வியாபாரிகளாக இருந்தனர். படிப்பு என்று எடுத்துக்கொண்டால் தொடக்கப் பள்ளி முடித்தவர்களே அதிகம். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிப் படிப்பெல்லாம் சிலருக்கு மட்டுமே வாய்த்த வரமாக இருந்தது. கல்லூரி பட்டப்படிப்பு பற்றிக் கேட்கவே வேண்டாம். கைவிட்டு எண்ணிவிடலாம். அரசாங்கப் பணியில் இருந்தவர்களோ அரிதிலும் அரிது.

Thursday, February 12, 2015

பிரபல ஈரானியத் திரைப்பட இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியுடனான நேர்காணல் - எம்.ரிஷான் ஷெரீப் 'நான் ஒரு பணயக் கைதியாகி விடுகிறேன்'

  கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகதி வரை, கத்தாரிலுள்ள தோஹா திரைப்படக் கல்லூரியானது, பிரபல ஈரானியத் திரைப்பட இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியை கத்தாருக்கு வரவழைத்திருந்தது. மத்திய கிழக்கு நாடுகளுக்கான அவரது முதல் திரைப்பயணம் இதுவெனக் கூறலாம். தோஹா திரைப்படக் கல்லூரியானது இதனை ஒரு விழா போலவே கொண்டாடியது. 13 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகதி வரை அவரது திரைப்படங்களையும், குறுந் திரைப்படங்களையும், ஆவணத் திரைப்படங்களையும் தொடர்ச்சியாகத் திரையிட்டது. அது மாத்திரமல்லாது, திரைப்படங்களைக் காண வந்திருந்தவர்களையும் இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியோடு நேரடியாக உரையாட ஏற்பாடு செய்திருந்தது.

வாழ்வு நலத்திற்கு வாழைப்பழம்!


எளிதில் கிடைக்கும் எந்த ஒன்றின் அருமையும் எளிதாய் புலப்படாது என்பார்கள். காசு பணத்திலிருந்து கீரைகள் வரை, பாச உறவுகளிலிருந்து பழங்கனிகள் வரை இந்த உண்மை அவ்வப்போது உறைக்கத் தான் செய்கிறது. அவற்றுள் ஒன்று வாழை.

வாழைப்பழம் வேண்டாத குரங்கும் உண்டோ என்று பழமொழி இருக்கிறது.  "வாழை வாழவும் வைக்கும்; தாழவும் வைக்கும்" என்பதும் ஒரு பழமொழி. அம்பணம், அரம்பை, கதலி, பனசம், மடல், கோள் என்ற பெயர்களிலும் தமிழலக்கியத்தில் வாழை வாழ்ந்து கொண்டிருக்கிறது, வாழையடி வாழையாக.

தாம்பூலப் பொருளாவதிலிருந்து  தமிழர் திருமணப் பந்தலின் முகப்புத் தூணாகி நிற்பது வரை வாழையின் பயன்கள் எண்ணில.  ஏனைய பயன்களை விடவும் சிறந்த மருத்துவப் பயன்களை எளிமையாகத் தரவல்லது வாழை என்னும் அளவில்அந்த ‘எளிய’ உண்மைகளிலிருந்து  ஒன்றை இங்கு உரைக்கப் பார்க்கிறேன்.

Wednesday, February 11, 2015

வரலாற்றை உலகுக்கு கொண்டு செல்வோம் - Editor Alaudeen



எனது முகநூல் உறவுகளே,
''தன் வரலாறு தெரியாத சமுதாயம் வரலாறு படைக்க முடியாது''
-அமெரிக்க மாவீரன் மால்கம் X

அந்த அடிப்படையில் நான் இயக்கியுள்ள "சேரமான் பெருமான்" ஆவணப்பட திரையீடல் மற்றும் படத்தின் வெளியீட்டு விழா இறைவன் நாடினால் வரும் ஞாயிற்றுக் கிழமை நடைப்பெருகிறது.இதில் அரசியல் தலைவர்கள்,இயக்க தலைவர்கள்,சினிமா இயக்குனர்கள்,குறும்பட ஆவணப்பட இயக்குனர்கள்,சமூக ஆர்வலர்கள்,எழுத்தாளர்கள்,
இலக்கியவாதிகள்,கவிஞர்கள் கலந்துகொள்கிறார்கள். அன்பு முகநூல் நண்பர்கள் நீங்களும் கலந்துகொள்ளுங்கள்.உங்கள் நண்பர்களையும் கலந்துகொள்ள சொல்லுங்கள்.
இன்ஷா அல்லாஹ் ஞாயிற்றுக்கிழமை 6 மணிக்கு ஆவணப்படம் திரையிட்டு பின்னர் வெளியிடப்படும்.
எனது முகநூல் நண்பர்களுக்கு அழைப்பிதழை முகநூல் மூலமாக அழைப்பு கொடுக்கிறேன்.அனைவரும் கலந்துகொள்ளுங்கள்

வரலாற்றை உலகுக்கு கொண்டு செல்வோம்.இன்ஷா அல்லாஹ்



-

Saturday, February 7, 2015

ஹாஸ்டலில் இருந்து...

 
உன்னைக் கட்டிப்பிடிக்கும்
காலங்களில் விடுதியில்
விட்டுச்சென்றாய்- என்னை
படிப்புக்காக விற்றுச்சென்றாய்!

என் கால்கள் இரண்டும்
உனக்காக முண்ட;
கத்தி அழுதேன் நீயோ
உன் காதை பொத்திச்சென்றாய்;
விழியால் கதறி சென்றாய்!

இருள் சூழ்ந்த இரவில் உன்
அணைப்பிற்கு ஏங்கி அழுவேன்;
உன்னால் தலைக்கோதி
இமைமூட வேண்டிய என்னை;
கம்புடன் கண்ணை மூடச்சொல்லும்
விடுதி ஊழியன்!

Thursday, February 5, 2015

நோவா கப்பல் மோசே கைத்தடி...! / Hilal Musthafa

நோவா கப்பல்
மோசே கைத்தடி...!

இந்த வாக்கியங்கள் மிக நீண்ட காலமாக
ஒரு உந்து சிந்தனையாக எனக்குள் பரிணமித்துக் கொண்டே இருக்கின்றன.

எந்தத் தளத்தில் அவற்றை இறக்கி வைப்பது?என்ற அங்கலாயிப்பும் இணைந்தே வந்து கொண்டிருக்கின்றன.

சமூகவியல் சிந்தனையின் பரிமாணங்கள் எனக்குள் எழும் போதெல்லாம் நோவா கப்பல் மோசே கைத்தடி கூடவே பிணைந்துவரும்.

சூஃபி இஸக் கோட்பாடுகளை நினைக்கும் தோறும் இந்த நோவா கப்பல் மோசே கைத்தடி வந்துத் தொற்றிக் கொள்ளும்.

இப்போது கூட இந்தக் கோணங்களின்
ஆழத்தில் என் பதிவுகள் இருக்கப் போவதில்லை ஆனாலும் பதிவிடத் தொடங்கி விட்டேன்.

Tuesday, February 3, 2015

”உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்ட” / ரபீக்

”உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்ட”
----------------------------------------------------------------

”உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்ட” இப்படியொரு சொலவடை நம்ம ஊருப்பக்கம் பேசிக்கிட்டுருப்பத கேட்டிருப்போமுல்ல, இப்ப அதை அமெரிக்காவும், அதன் பேச்சைக் கேட்ட சவூதி, வெனிசூலா போன்ற எண்ணெய் ஏற்றுமதி நாடுகளெல்லாம் சொல்லிப் புலம்பப் போறத வெகு சீக்க்ரம் கேட்கப்போறோம்...

இப்போது, ஒருவழியாக உலகின் மிகப் பெரிய எண்ணெய் இறக்குமதி நாடான சீனாவை தம் பக்கம் சாய்த்து வெற்றி கண்டிருக்கிறது ரஷ்யா. மேற்குலகம் ரஷ்யாவை புறந்தள்ளி அந்நியப்படுத்தியும், பொருளாதாரத்தில் நசிக்கியும் சதிவேலை நடத்திக் கொண்டிருந்த வேளையில், சீனாவுடனான உறவினை பலப்படுத்தி அடக்க விலையில் எண்ணெய் விற்று தமது எதிர்காலத்தின் திட்டத்திற்கு வலுசேர்த்துக் கொண்டிருந்தது ரஷ்யா.

Monday, February 2, 2015

சுவனப்பிரியன் கணிணிப் பிரியனாக மாறிய வரலாறு!

நான் படித்தது என்னவோ 12 ஆம் வகுப்பு வரை தான். 12(ப்ளஸ் டூ) பாஸ் பண்ணியவுடன் பாஸ் போர்ட் எடுத்து சேல்ஸ் மேன் வேலைக்காக சவுதி வந்து விட்டேன். இங்கு வந்து 7 அல்லது எட்டு வருடங்கள் சேல்ஸ் மேனாகவே பிழைப்பு ஓடிக் கொண்டிருந்தது. எங்கள் கம்பெனியில் அலுவலக வேலை அனைத்தும் எகிப்தியர்கள் கையில் இருந்தது. எகிப்தியர்கள் பொதுவாகவே தங்களை அறிவில் சிறந்தவர்கள் என்று எப்போதும் எண்ணிக் கொள்வர். (நம் ஊர் பார்பனர்களைப் போல) நம் ஊர் பார்பனர்களும் எகிப்திலிருந்து நம் நாட்டுக்கு புலம் பெயர்ந்ததாகத்தான் ஆய்வுகளும் சொல்கிறது. பேசும் ஸ்டைல், அலுவலக வேலைகளை மாத்திரமே குறி வைப்பது, நிறைய படிப்பது, நிறம், முக அமைப்பு என்று ஏறத்தாழ நம் ஊர் பார்பனர்களை பார்பது போலவே இருக்கும். மோசே காலத்தில் எகிப்தியர்கள் மாட்டை கடவுளாக வணங்கி வந்தனர் என்று குர்ஆனும் கூறுகிறது. நம் நாட்டு பார்பனர்களுக்கும் மாட்டை தெய்வமாக பூஜிக்கும் வழக்கம் இன்றும் உள்ளதை நாம் காண்கிறோம். பழைய பதிவர் டோண்டு ராகவன் கூட தாங்கள் யூதர்களின் ஒரு பிரிவு என்று சொல்லி பதிவுகளே எழுதியுள்ளார்.

Sunday, February 1, 2015

இருப்போர் விலகி இல்லாதோர்க்கு வழி விடுங்கள்.

உதவி:

மனிதர்களிடையே உதவும் மனப்பான்மை குறைந்து விட்டதா.

ஆம் இன்று அது கொஞ்சம் குறைந்தே காணப்படுகிறது.
யார் காரணம் கொடுப்பவனா? பெறுபவனா?

என்னை கேட்டால் பெறுபவன் என்று தான் சொல்வேன்.அத்தியாவிசிய தேவை போக இன்று பலர் ஆடம்பரங்களுக்காகவும், பொய்களை சொல்லியும் யாசகம் கேட்கிறார்கள்.
இவர்களின் இச் செயலால் உண்மையான யாசகமும் மறுக்கப்படுகிறது.

கடனை பொறுத்தவரை பலர் அதை திருப்பி செலுத்துவதில்லை.இன்று கடன் வாங்குவோரில் நிறைய பேர் சொத்து வாங்குவதற்க்கும் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவற்குமே பயன் படுத்துகிறார்கள்.

பலரின் இம்மாதியான செயல்களால் சிலரின் உண்மையான தேவைகளும் இருப்பவனால் மறுக்கப்படுகிறது.